நட்பு பொன்மொழிகள்

நட்பு பொன்மொழிகள் :
நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது.
அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்

புத்தகங்கள்தான் நம்முடன் பேசும் மெளன நண்பர்கள்.

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான்.

நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.

வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.

ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.

சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.

உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.

ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.

புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

ஒரே சிந்தனையுடன் இருக்கும் இரண்டு உடல்கள் தான் நட்பு.

நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை.

உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் சிறந்த பரிசுதான் நட்பு.

உங்களை சரியான வழியில் எடுத்துச் செல்ல வந்திருக்கும் இறைத் தூதுவன்தான் நண்பன்.

பிரச்சினைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது.

சிறந்த நண்பன்தான் நமது நெருங்கிய உறவினன்.

புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.

காதலுக்கு கண் இல்லை. அந்த கண்களை திறந்து வைப்பது நட்புதான்.

நண்பர்களைக் கொண்டு இரு. நண்பனாக இரு.

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது பலரை அறிவாய், துக்கத்தில் மட்டுமே நண்பர்களை அறிவாய்.

நீ கவலையில் இருக்கும்போது, முத்தம், கடிதம், அணைத்தல் என எதுவும் தராத ஒரு நிம்மதியை உன் நண்பனது அமைதி தரும்.

நண்பர்களுக்குள் மன்னிப்புக்கும், நன்றிக்கும் இடமில்லை.

உன் மனதிற்குள் இருக்கும் பாடலை அறிந்தவனே நண்பன். எப்போது நீ ஒரு சில வார்த்தைகளை மறக்கிறாயோ அப்போது உன் நண்பன் அந்த வார்த்தையை எடுத்துக் கொடுப்பான்.

எனக்கு முன்னாடி நடந்து செல்லாதே, உன்னை பின்பற்றி வர நான் விரும்பவில்லை, என் பின்னாடி நடந்து வராதே, உனக்கு முன்னோடியாக இருக்க விரும்பவில்லை, என்னுடனே நடந்து வா என் நண்பனாக.

புதிதாக இருக்கும் நட்பு கரும்பு போன்றது. அதுவே உண்மையான நட்பாகும்போது சர்க்கரையாக இனிக்கிறது ஆனால் உனக்கொன்று தெரியுமா? அதுவே நீயாகும்போது நட்பு எனக்கு தேனாகிறது.

உண்மையான நண்பனை அறிவது மிகக் கடினம். உனக்கு சாமர்த்தியம் அதிகம்... நீ என்னை அறிந்துள்ளாய்.

நட்பு நீ நிற்கும் போது உன்னை உற்சாகப்படுத்தி இயக்க வைக்கும், தனிமையை இனிமையாக்கும், தேடும்போது வழிகாட்டியாகும், கவலையை போக்கி சிரிக்க வைக்கும், சந்தோஷத்தில் பாட்டுப் பாடும்.

தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு. - பிரையண்ட்

எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம். - கெதே

அறிவு என்பது நம்முடைய ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இதயம் நம்முடைய ஒவ்வொரு பகுதியாக இருக்கிறது. - ரிரேஸ்

சட்டம் ஒரு சிலந்திக்கூடு. வண்டுகள் அதை அறுத்துக்கொண்டு அப்பால் போகின்றன. ஆனால், பூச்சிகள் அதில் சிக்கிக் கொள்கின்றன.- செக்கோஸ்லோவேகியா

செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான். - கர்னல் கீல்

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. - லெனின்

வாழ்க்கை என்கிற ஆடையில் நன்மை தீமை என்ற இரு நூல்களும் இருக்கும். - ஷேக்ஸ்பியர்

அவரவர் விதி அவரவர் கையிலேயே இருக்கிறது. - விவேகாநந்தர்

தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில் பூரண அமைதி ஏற்படும். - பெர்னாட்ஷா

அன்பு என்பது கண்ணுக்குத் தெரியாத நீரூற்று. அது எப்போது எப்படி தோன்றுகிறது என்பதை நாம் அறிய முடியாது.

அசுத்தம் செய்யாதீர்கள். நாளை நீங்கள் குடிவர உள்ள இடம்.
-ஒரு இடுகாட்டு வாக்கியம்

நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட அனைத்தையும் நாம் மறந்துபோன பின், எஞ்சி நிற்பதற்குப் பெயர்தான் கல்வி.

ஒரு பெண்ணின் வயதை மறந்துவிட்டு, அவள் பிறந்தநாளை மட்டும் நினைவில் வைத்திருப்பவனே புத்திசாலி.

எந்தப் பழக்கமும், பழகப் பழக சுலபமாகிவிடும்... விடிகாலையில் எழுவதைத் தவிர...

விழிப்புடனிருங்கள். உங்கள் விரலிடுக்கில் கூட வாய்ப்புகள் நழுவிப் போகும்.

உண்மையை எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கட்டும்.


எந்தச் சமயத்திலும் கைவிடாமல் குறிக்கோள் வைத்து வெல். முயற்சியை நிறுத்தும்போதுதான் தோற்கிறாய்.

தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான் சாம்பியன்கள் மற்றவர்கள் நம்பவில்லையென்றாலும் 'நம்மால் முடியும்' என்பதை நம்பியவர்கள், முடியும் என்றால் முடியும்.

தோல்வியிலிருந்து எதும் கற்றுக் கொள்ளாவிட்டால்தான் அது உண்மையான தோல்வி.. தோல்வி உங்களை அடையாளம் காட்டும் நான் மற்றபடி வாழ்ந்தால் இன்னும் தப்புகள் செய்வேன்.

களத்தில் குதியுஙகள். கைகள் அழுக்காகட்டும், தடுக்கி விழுங்கள். எழுந்து நட்சத்திரங்களைச் சாடுங்கள்.

மேதை என்பது ஒரு சதவிகிதம்தான் உள்ளுணர்வு மற்றதெல்லாம் வியர்வை. ஆபத்தில்லாத, ரிஸ்க் எடுக்காத பாதைதான் அதிக ஆபத்தானது.

வெற்றிக்கு அதிக நாளாகும். நாள் மட்டும்தான்.

சின்ன காரியங்களை நன்றாக இப்போது செய்யுங்கள். நாளடைவில் பெரிய காரியங்கள் உங்களைத் தேடிவரும். எல்லா ஆரம்பங்களும் சிறியவையே ஆரம்பிப்பதுதான் கடினம்.

வாய்ப்புகளைப் பெரும்பாலோர் தவறவிடுவதற்குக் காரணம் அவை உழைப்பு வடிவத்தில் வருவதால். இதுதான் சந்தர்ப்பம் என்று எதிலும் எழுதி ஒட்டியிருக்காது.

கிடைப்பது உயிர் வாழப்போதும். கொடுப்பதில்தான் நிஜ வாழ்க்கை இருக்கிறது. மற்றறவரை உற்சாகப் படுத்தும்போது நமக்கு எத்தனை உற்சாகம் ஏற்படுகிறது!

யாரும் தான்தோன்றியல்ல. நம்மை ஆக்கியவர்கள் ஆயிரம்பேர், ஒவ்வொருவரும் நமக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார்கள். உற்சாக வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். குணத்திலும், எண்ணத்திலும், வெற்றியிலும் உதவியிருக்கிறார்கள்.

நட்சத்திரமாக சொந்த வெளிச்சம் தேவை, சொந்தப்பாதை தேவை. இருட்டைக் கண்டு பயப்படக்கூடாது இருட்டில்தான் நடசத்திரங்கள் நன்றாக ஜொலிக்கும்.

எங்களுக்கு கல்வி வேண்டாம்- எண்ணக்
கட்டுப்பாடு வேண்டாம்
வகுப்பில் கேலிவேண்டாம்
ஆசிரியர்களே பிள்ளைகளை விட்டுவிடுங்கள்
நீங்கள் எல்லாம் சுவரில் மற்றொரு செங்கல்தான்

அப்பா கடல் கடந்துசென்றார்
நினைவுகளை மட்டும் விட்டுச்சென்றார்
ஆல்பத்தில் ஒருபோட்டோ
வேறென்ன விட்டுச்சென்றீர் அப்பா
சுவரில் மற்றொரு செங்கல்லைத் தவிர?

எனக்கு ஆயுதம்வேண்டாம்
போதை வேண்டாம்
சுவரெழுத்து தெரிகிறது
வேறு எதும் தேவையில்லை
வேறெதுவுமே தேவையில்லை
எல்லாம் சுவரில் செங்கற்கள்தான்

Comments

Popular posts from this blog

ஏப்ரல் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்

வாழைப்பழம் வரலாறு மற்றும் பயன்கள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை....

டிசம்பர் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்