Posts

Showing posts from January 26, 2014

வாரியார் சுவாமி பொன் மொழிகள்

வாரியார் சுவாமி பொன் மொழிகள் வாரியார் சுவாமி பொன் மொழிகள் ************* 1. எல்லா உயிரும் ஈசன் கோயில் 2. மாசிலா மனமே ஈசன் கோயில் 3. பயிருக்கு முள்வேலி பணத்திற்கு தருமம்வேலி  4. நல்ல குணமுடைய மனைவியுடன் வாழ்தல் விமானத்தில் போவது போன்றது 5. ஏழைகளுக்காக உழை 6. நல்ல சிந்தனை 7. அன்னம், நெய், உப்பு போன்றவற்றை கையால் படையாதே 8. ஏழையின் உள்ளத்தில் இறைவனைப் பார் 9. யானையைப் போல் குளி 10. தேனீயைப் போல உழை 11. உண்டு கெட்டது வயிறு உண்ணாமல் கெட்டது உறவு பார்த்துக் கெட்டது பிள்ளை பாராமல் கெட்டது பயிறு கேட்டுக் கெட்டது குடும்பம் கேளாமல் கெட்டது கடன்.

கஸ்தூரி மஞ்சள்

Image
கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும். * பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும். * ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும். * கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும். கஸ...

தமிழ்த் தட்டச் சுகணினியில் ......

கணினியில் தமிழ்த் தட்டச்சு கணினியில் தமிழ்த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் (மென்பொருட்கள்) மூலமும் நீட்சிகள் மூலமும் கிடைக்கின்றன. நெருப்பு நரி (FireFox) இணைய உலாவியின் தமிழ்த் தட்டச்சு நீட்சி மூலம் மிகவும் எளிதாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம். தமிழில் தட்டச்சு செய்வதற்கு தட்டச்சு பயின்றிருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் “உச்சரிப்பு தட்டச்சுமுறை” கூடுதலாக இவற்றுள் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது 'அம்மா, அப்பா' என தட்டச்சு செய்ய அதன் உச்சரிப்பை ஆங்கிலத்தில் 'ammaa, appaa' தட்டச்சு செய்வது போதுமானது. 1.இணைய உலாவியில் (நீட்சிகள்) 2.கணினியில் (மென்பொருட்கள்) 3.இணையத்தில் (இணைய பக்கங்களில் இணைய இணைப்புடன்) 1.நெருப்பு நரி (FireFox) இணைய உலாவியில் தமிழ்விசை (tamilkey) நீட்சியை கீழ்கண்ட முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து பதிந்துகொள்வதன் மூலம் தமிழ் தட்டச்சு செய்யலாம். ‘தமிழ்விசை’ இங்கே சொடுக்கவும் https://addons.mozilla.org/en-US/firefox/addon/tamilvisai-tamilkey/ 2.கணினியில் தமிழ் தட்டச்சு செய்ய பல மென்பொருட்கள்...