நம்பிக்கை அர்த்தம்
பலருக்கு மூடநம்பிக்கை 1. "வடக்கே சூலம்" என்பார்கள். அதாவது வடக்கு பக்கம் தலை வைத்து படுக்கக்கூடாது என்று. இது பலருக்கு மூடநம்பிக்கையாக தெரியும். ஆனால் உன்மை என்ன என்றால், வடக்கு பக்கம் (North Pole) காந்த சக்தி அதிகம். அதனால் வடக்கு பக்கம் தலை வைத்து படுத்தால் அது நம்முடைய மூளையை பாதிக்கும். அதனால் தான் இந்த சொற்றொடர் உருவானது. 2. வீட்டுக்குள் ஒரு மணப்பென் வரும் பொழுது வலது காலை வைத்து வரவேண்டும் என்பார்கள். அதற்கு காரணம் "இந்த உலகம் இடமிருந்து வலமாக சுற்றுகிறது. அதே போல நானும் இந்த உலகோடு (அதாவது புகுந்த வீட்டோ டு) ஒத்துப் போவேன்" என சொல்வதாக அர்த்தம். 3. பசுவின் எருவை எரித்தால் வரும் சாம்பலை (திருநீரு) நெற்றியில் பூசிக்கொள்வது, இரு வழிகளில் விளிம்புகிறது. அதில் இருக்கும் மருத்துவகுணம் தலைவலிக்கு இதமாக இருக்கும். மற்றும் அது பார்ப்பவர்க்கு "என் மனம் இந்த திருநீரைப் போல வென்மையாக, சுத்தமாக இருக்கிறது" என சொல்வது. அதே போல குங்குமம் இடுவது, "என் இரத்தம் சுத்தமாக இருக்கிறது" என்று பார்ப்பவர்க்கு சொல்வதாக அர்த்தம். (கண்ணதாசனின் "அர்த...