Posts

Showing posts from March 2, 2014

நட்பு பொன்மொழிகள்

நட்பு பொன்மொழிகள் : நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம் புத்தகங்கள்தான் நம்முடன் பேசும் மெளன நண்பர்கள். எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை. உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே. வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன். உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது. உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன். பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான். நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள். வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான். ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள். சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும். உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன். ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந...