ஹார்ட் டிஸ்க்கினைப் பல பிரிவுகளாக அமைக்க....

முன்பெல்லாம், கம்ப்யூட்டரை முதலில் செட் செய்திடுகையிலேயே, ஹார்ட் டிஸ்க்கினைப் பல பிரிவுகளாகப் (Drives) பிரித்து அமைப்பார்கள். பின்னர், அவற்றை மீண்டும் கூடுதல் பிரிவுகளாகவோ, அல்லது ஏதேனும் ஒரு பிரிவினை, இரண்டு அல்லது மூன்றாகவோ பிரிப்பது என்பது இயலாத செயலாக இருந்தது. ஆனால், காலப் போக்கில், ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கூட, அதன் பிரிவுகளில், உட் பிரிவுகளை ஏற்படுத்தும் வகையில் பல இலவச டூல் புரோகிராம்கள் இணையத்தில் கிடைத்து வருகின்றன. இவற்றைப் பொதுவாக பார்ட்டிஷன் டூல் புரோகிராம் என அழைக்கின்றனர். இவற்றில் மேஜிக் பார்ட்டிஷன் புரோகிராம் என்பது பலராலும் பயன்படுத்தப்படும் டூல் ஆகும். இணையத்தில் இந்த டூல் சார்ந்த புரோகிராம்கள் குறித்துத் தேடுகையில், எளிய,ஆனால் அதிகப் பயனுள்ள புரோகிராம் ஒன்று தென்பட்டது. அதன் பெயர் மினி டூல் பார்ட்டிஷன் விஸார்ட் (MiniTool Partition Wizard).

இதனை http://www.partitionwizard.com/free-partition-manager.html  இங்கு  கிளிக் செய்து இதில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இவற்றின் பயன்பாடுகள் குறித்து இங்கே காணலாம். இந்த புரோகிராம் மூலம் நாம் மேற்கொள்ளக் கூடிய சில சிறப்பான பயனுறை செயல்பாடுகள் ஒரு பார்டிஷனை இரண்டாக, எளிதாகப் பிரிக்கலாம்.

Comments

Popular posts from this blog

ஏப்ரல் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்

வாழைப்பழம் வரலாறு மற்றும் பயன்கள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை....

டிசம்பர் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்