Posts

Showing posts from 2014

registration number

தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்டு TN19Z - மதுராந்தகம் TN20 - திருவள்ளூர் TN20Y - பூணாமல்லி TN21 - காஞ்சிபுரம் TN21W - ஸ்ரீபெரும்புதூர் TN22 - மீனம்பாக்கம் TN23 - வேலூர் TN23T - குடியாத்தம் TN23Y - வாணியம்பாடி TN24 - கிருஷ்ணகிரி TN25 - திருவண்ணாமலை TN25Z - ஆரணி TN28 - நாமக்கல் TN28Y - பரமாதி வெள்லூர் TN28Z - ராசி புரம் TN29 - தர்மபுரி TN29W - பாலக்கோடு TN29Z - ஹரூர் TN30 - சேலம் (மேற்கு) TN30W - ஓமலூர் TN31 - கடலூர் TN31U - சிதம்பரம் TN31V - விருதாசலம் TN31Y - நெய்வேலி TN32 - விழுப்புரம் TN32W - கள்ளக்குறிச்சி TN32Z - உளுந்தூர்பேட் TN33 - ஈரோடு TN34 - திருச்செங்கோடு TN36 - கோபிசெட்டிபாளயம் TN36W - பவானி TN36Z - சத்தியமங்கலம் TN37 - கோவை (தெற்கு) TN38 - கோவை ...

ஆசிரியர்களுக்குப் பயன்படும் முக்கியமான இணையதளங்கள்

வணக்கம் நண்பர்களே..!பெற்றோர்களுக்கு அடுத்தப்படியாக குழந்தைகளை நல்லதொரு குடிமகனாக உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான். ஏன் பெற்றோர்களைவிட ஒரு படி உயர்ந்து, ஒரு மாணவனை நல்லவனாக்குவதிலும், வல்லவனாக்குவதிலும், திறமைகளை வெளிக்கொணர்ந்து ஒரு சாதனையாளனாக மாற்றுவதிலும் முதன்மையாகத் திகழ்பவர்கள் ஆசிரியர்கள். http://www.tnkalvi.com/ TEACHER TAMILNADU   http://www.teachertn.com/ ஆசிரியர் கூட்டணி   http://teachersalem.blogspot.com/ ஆசிரியர் தேர்வு   http://www.trb-exam.blogspot.com/ ஆசிரியர் தேர்வு வாரியம்   http://trb.tn.nic.in/ ஆசிரியர்கள் ,  மாணவர்கள் நண்பன்   http://tngotngo.blogspot.com/2010/09/willing-to-get-mutual-transfer-fron.html க ல்விச் சோலை   http://www.kalvisolai.com/ தமிழ்நாடு அரசு   http://www.tn.gov.in/usefullinks/links-state.htm

தொலைந்து போன மொபைல்

Image
தொலைந்து போன மொபைல் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பது Track செய்வது எப்படி இந்த நவீன யுகத்தில் அனைவரும் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்ககளை பயன்படுத்துகின்றனர். அனைவரின் கைகளிலும் தற்போது புகுந்து விளையாடுவது Samsung ஸ்மார்ட் போன்கள் தான். உங்கள் விலை உயர்ந்த சாம்சங்  தொலைபேசி தொலைந்து போகும்பொது உங்கள் மனநிலையை மிகவும் பாதிக்கும். அத்தோடு சேர்ந்து உங்கள் விலை மதிப்பற்ற தகவல்களும்  தொலைந்து போதுவதும் பெரும் இழப்பை தங்களுக்கு ஏற்படுத்தும். வரு முன் காப்போம் Samsung  Smart Phone  கள் தொலைந்து போனால் அதை எப்படி கண்டு பிடித்தப்து அதை எவ்வாறு இருக்கும் இடத்திலிருந்தே இயக்குவது உள்ள விபரங்களை இங்கே வழங்கியுள்ளோம். இதற்கு உங்கள் தொலைபேசி ஒரு ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போனாக இருக்க வேண்டும். முதலில் உங்கள்  தொலைபேசியை எதிர்கால நன்மை கருதி முன்னேற்பாடக தயார்படுத்த வேண்டும். அதற்கு பின்வரும் ஆப்சனை உங்கள் போனில் பயன்படுத்தவும். 1. Settings-> Location & Settings ->அங்கே  Remote Controls  என்பதில் Tick செய்யவும். 2. அப்போது உங்கள் Samsung  Account ...

மின் கட்டண வகைகள்

Image
# என்னென்ன கட்டண வகைகள் உள்ளன? புதிய மின் இணைப்பு பெற பதிவு கட்டணம், இணைப்புக் கட்டணம், மீட்டர் பாதுகாப்பு காப்புத்தொகை, விரிவாக்கக் கட்டணம் மற்றும் காப்புத் தொ கை வசூலிக்கப்படுகின்றன. இது தவிர மீட்டர் மாற்று கட்டணம், மீட்டர் பலகை மாற்று கட்டணம், துண்டிப்பு மற்றும் மறு இணைப்புக் கட்டணம், மீட்டர் மாற்ற, மீட்டர் பரிசோதனை ஆகிய கட்டணங்களும், மின் சுமை குறைப்பு மற்றும் அதிகரிப்புக் கட்டணங்கள், மின் பயன்பாட்டுக் கட்டணம், பெயர் மாற்றம், அபராதக் கட்டணம் போன்ற வகைகள் உள்ளன. # கட்டணத்தை எப்படி செலுத்தலாம்? மின் கட்டணத்தை அந்தந்த பிரிவு அலுவலகங்களில் பணம், காசோலை அல்லது வரைவோலையாக செலுத்தலாம். தேர்வு செய்யப்பட்ட கணினிமயமாக்கப்பட்ட தபால் அலுவலகங்கள், சிட்டி வங்கி, கரூர் வைஸ்யா வங்கியின் மொபைல் போன் வங்கி சேவை ஆகியவை வழியாகவும், இணையதளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வழியாகவும், தானியங்கி மின் கட்டண இயந்திரம் மூலமாகவும் செலுத்தலாம். குறிப்பிட்ட சில செல்போன் சேவைகள் வழியே, மொபைல் போனிலும் செலுத்தலாம். # எத்தனை நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்? தாழ்வழ...

சோலார் பம்பு செட் அமைக்க 80% மானியம்: தமிழக அரசு

Image
சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது .  தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது .  இந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு  80  சதவிகிதம் மானியம் வழங்கப்படும் . 20  சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும் . ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் .  ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ .4,39,950,  திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ .5,01,512  எனவும் விலை நிர்ணயித்துள்ளது .  இந்த தொகையில் 20  சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது . தவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம ,  தெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது .  இதற்கு ஏ...

இன்டர்நெட் மோடத்தினை UNLOCK செய்வது எப்படி?

Image
நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance , Docomo , Mts,vodafone)  Dongle  இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால்  Unlock Code  கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது? முதலில் உங்களுடைய Don gle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.இதை அப்படியே Copy  செய்து இந்த தளம் சென்று http:// www.wintechmobil  es.com/tools/  huawei-code-calc ulator/, உங்களுடைய DONGLEஇன் IMEIகொடுத்து  CALCULATE  கொடுக்கவும். இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும் ...

பழங்களின் மருத்துவ குணங்கள்

Image
விளாம்பழம்: உடலுக்கு நல்ல இரத்தத்தைத் தரும் தன்மை கொண்டது இந்தப் பழம். வெப்பத்தைத் தணித்துத் தாகத்தையும் தீர்க்கும் தன்மையுடையது; நல்ல பசியையும் உண்டாக்கும். இலந்தைப் பழம்: பித்த மயக்கத்தை நீக்கும் தன்மை இதற்கு உண்டு. பெரு விரக்தியைத் தணிக்கும். வாத நோயைக் குணப்படுத்தும். எனவே, இது சிறந்த மருந்துப் பொருளாகிறது. வாழைப்பழம்: உடம்பை வெளுக்க வைக்கும் சோம நோய் (சோவை நோய்) பித்த பிணிகள், மூர்ச்சையடைதல் இவை குணமாகும். செவ்வாழை, வெண் வாழை, ரஸ்தாளி, மொந்தன், அடுக்குவாழை, மலை வாழை, பச்சை வாழை, கருமை வாழை ஆக இந்த எட்டு வகையான வாழைப் பழங்களுள், செவ்வாழையிலிருந்து மொந்தன் வாழை வரை நோயாளிகளுக்கு உணவாகக் கொடுக்கலாம். ஆனால், வாதநோய் உள்ளவர்களுக்கு இந்த எட்டு வகையான வாழைப் பழங்களும் கொடுக்கக் கூடாது. பேயன் வாழைப்பழம்: இது நல்ல குளிர்ச்சியைத் தரும் பழமாகும். உடல் சூடு தணியும்; வைத்தியம் தெளியும். ஆனால், வாதத்திற்கு இது பொருந்தாது. வாத நோயாளிகளுக்கு இதைக் கொடுக்கக் கூடாது. இது அதிகக் குளிர்ச்சியுடையதாகையால் வாதத்தைப் பெருக்கும் தன்மை கொண்டதாகும். மொந்தன் வாழைப்பழம்: அக்கினி மந்தம்; வாத வலி, சீ...

தமிழ்

Image
தமிழ் தமிழ் மொழி  ( Tamil language ) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும்  மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, ப...

பற்களில் காரை படிவதை தடுக்க எளிய வழி

என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.   பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்.. நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும். இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.. கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும். வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செ...

Metatag சரியாக இணைத்தீர்களா

Image
தெரியாதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன். உங்கள் வலைதளம் கூகுளில் முதன்மை பெறவில்லையா அதற்க்கு முக்கியமான காரணம் META  TAG சரியாக இணைக்காததுதான்.  நீங்கள் META TAG சரியாக இணைத்துள்லீர்களா என பார்க்க நிறைய இனைய தளங்கள் உள்ளன.  நிறையபேர் பயன்படுத்திய இணையதளத்தின் லின்க்கை கீழே கொடுத்துள்ளேன்.  அதில் உங்கள் வலைதளத்தின் முகவரியை இணைத்து பரிசோதித்துக் கொள்ளுங்கள்.  இதற்க்கான லிங்க்  இதோ .  இந்த தளமே META TAG உருவாகிக் கொள்வதற்கான வழியும் தருகிறது.  இதற்க்கான லிங்க்  இதோ .  இந்த தளத்தில் உங்கள்  வலைதளத்தின் விவரங்களை கொடுத்து META TAG உருவாக்கி உங்கள் தளத்தில் இணைத்து இணைத்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள்.  நன்றி... site link:http://tamil-computer.blogspot.com/2011/06/metatag.html

இலவச மொபைல் அப்பிளிகேஷன்....

இலவசமாக மொபைல் அப்பிளிகேஷன்ஸ்( Free Mobile Applications) டவுன்லோட்( Download  ) செய்ய இங்கே செல்லவும்.. http://www.freewarelovers.com/ அன்ட்ராய்டு(ANDROID), பால்ம்(PALM OS), பிளாக்பெர்ரி(BLACKBERRY), சிம்பியன்(SYMBIAN) போன்ற மொபைலுக்கான இலவச அப்பிளிக்கேஷன்கள் இங்கே கிடைக்கின்றன.

VOIP கைடு

உலக நாடுகளுக்கு போன் பேச வேண்டுமா?அதற்கு ஏற்ற  VOIP  சாப்ட்வேர் எது? மிகவும் குறைவான கட்டணம் வசூலிப்பது எந்த சாப்ட்வேர். காலின்(calling) தரம் சாப்ட்வேர் உபயோகிக்கும் முறை அனைத்தும் சரியாக உள்ளதா? இப்படி பல விசயங்களை ஆராய்கின்றது இத்தளம். மிகவும் உதவியான தளம். வெளிநாடுகளுக்கு VOIP மூலம் கால்(call) பண்ண வேண்டும் என நினைப்பவர்களுக்கு இத்தளம் உதவியாக உள்ளது. http://voipguides.blogspot.com

ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க

ஜிமெயில் இலவசமாக இருப்பதனால் மட்டுமின்றி, அதன் அளவற்ற ஸ்டோரேஜ் இடம், கூடுதல் வசதிகள், இணைந்த அதிவேக தேடல் வசதி, இதனால் கிடைக்கும் மற்ற கூகுள் தள வசதிகள் ஆகியவற்றால், இணையம் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளனர். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்களை வெவ்வேறு பெயர்களில் வைத்துள்ளனர். ஆனால் இதில் ஒரு சிக்கல் எழுகிறது. சில பிரவுசர்கள், ஒரு நேரத்தில் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை மட்டுமே திறக்க அனுமதிக்கின்றன. எடுத்துக் காட்டாக, நான் பயர்பாக்ஸ் பிரவுசரில், முதலில் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்து பார்த்து, பின்னர், இன்னொரு டேப்பில் அடுத்த ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்தேன். என்னைக் கேட்காமலேயே, முதல் அக்கவுண்ட் முடித்துவைக்கப்பட்டது. இது ஏன் என ஆங்காங்கே சென்று பார்த்தபோது, அது அப்படித்தான் என்பது போல செய்தி கிடைத்தது. ஆனால் இன்னொரு வழியை இங்கு கையாண்டேன். இன்னொரு முறை பயர்பாக்ஸ் பிரவுசர் ஐகானில் கிளிக் செய்து, இரண்டாவதாகவும் இந்த பிரவுசரில், ஜிமெயில் தளம் திறந்து, இன்னொரு அக்கவுண்ட்டைத் திறந்தேன். இரண்டும் இயங்கியது. மூடப்படவில்லை. ஆனால், இன்ட...

தமிழில் டைப் செய்ய

தமிழில் டைப் செய்யும் விதம் பற்றி அறிய இந்த இணையதளங்களைப் பார்க்க http://www.muthu.org/component/option,com_wrapper/Itemid,83/ http://www.suratha.com/

ஓபன் ஆபிஸ் சாப்ட்வேர்

மைக்ரோசாப்ட் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பிற்கு இணையாக அதன் அனைத்து அப்ளிகேஷன்களும் அடங்கியதாக இயங்குவது ஓப்பன் ஆபீஸ் ஆகும். ஆபீஸ் டாகுமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷீட், பிரசன்டேஷன் மற்றும் பல வகையான பைல்களை உருவாக்கவும், பயன்படுத்தவும் இது வழி வகுக்கிறது. இந்த அப்ளிகேஷன் தொகுப்பு உருவாக்கப் பயன்பட்ட புரோகிராம் வரிகளை யாரும் இன்டர்நெட்டிலிருந்து பெறலாம் என்பதால், பல புரோகிராமர்கள் இதனைச் செம்மைப் படுத்தியுள்ளனர். இந்த ஆபீஸ் தொகுப்பிற்கு பல பாராட்டுரைகள் உலகெங்கும் கிடைத்துள்ளன. இது முற்றிலும் இலவசமே. ஆங்கிலத்தில் வரும் கம்ப்யூட்டர் இதழ்களுடன் வழங்கப்படும் சிடிக்களில் இந்த தொகுப்பு தரப்படுகிறது. ஆனால் அவற்றைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. இன்டர் நெட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். டவுண்லோட் செய்திட நீங்கள் அணுக வேண்டிய இணைய தள முகவரி  http://download.openoffice.org/other.html

பணம்

பணம் பணம்  என்பது, மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள், சேவைகள் முதலியவற்றைப் எளிதாகப் பரிமாறிக்கொள்ள, ஈடான மதிப்புடையதாக ஓர் அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள அலகு. சேமிப்புக்கும் இது பயன்படும் அலகு. சில வரைவிலக்கணங்களின்படி பணம் என்பது பெறுமதியை தீர்மானிக்கும் அலகாகும். பொதுப் பயன்பாட்டில், பணம் என்பது பெரும்பாலும் நாணயத்தை  குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. தொடக்க காலத்தில் கொடுக்கல்-வாங்கல் தொழிலானது(வணிகமானது) பண்டமாற்று முறையில்  நடைபெற்றது. இம்முறையின் கீழ் தாம் கொள்வனவு செய்யும் பொருளின் பெறுமதிக்கேற்ற இன்னொரு பொருளை விற்பனையாளரிடம் கொடுத்தாக வேண்டும். மேலும் இம்முறையின் கீழ் சேவைகளை வழங்குபவர்களுக்கு ஊதியமாக அரிசி, தானியம் முதலான பொருட்களே கொடுக்கப்பட்டன. எடுத்துக்காட்டுக்கு, வயல் வேலையாட்களின் சம்பளமாக விளைச்சலின் ஒரு பகுதி கொடுக்கப்பட்டது. (இம்முறை இன்றும் தமிழ்நாட்டில் நடப்பில் உள்ளது.) தொடக்கத்தில் பொருட்களையோ சேவைகளையோ பெறும் போது அனைத்துவித பொருட்களும் பரிமாறப்பட்டாலும் பின்னர்,  உப்பு ,  சிப்பி  போன்ற சில குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே...

இளநரையை தடுக்க

Image
 -இயற்கை வைத்தியம் பொதுவாக நரைமுடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது. அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர். ஆகவே இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். பொதுவாக நரைமுடியை போக்குவது சற்று கடினமானதாக இருந்தாலும், முறையாக நம்பிக்கையுடன் முடியை சரியாக பராமரித்து வந்தால், நிச்சயம் முடியை கருமையாக்க முடியும். இங்கு அத்தகைய நரைமுடியை கருமையாக்க உதவும் சில பொருட்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை தவறாமல் பின்பற்றி வாருங்கள். நிச்சயம் நரை முடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இஞ்சி நரை முடியை கருமையாக்க வேண்டும...

பீர்க்கன் காய்

Image
பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. வடக்கு மெக்ஸிகோவும், வட அமெரிக்காவும் இதன் தாயகமாகும். நீண்ட, மத்திய, குட்டை எனப் பல வகைகள் பீர்க்கனில் உண்டு. tokado_5உலகில் அமெரிக்கர்கள்தாம் பீர்க்கன்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள். அவர்கள் சாப்பிடும் லூஃபா அக்யுட்ஆங்குலா (Luffa Acutangula) என்ற வகைப் பீர்க்குதான் எல்லா நாடுகளிலும் பிரபலம். பழுத்த பிறகு தான் முற்றிய பிறகு தான் பீர்க்கங்காயைச் சமையலில் சேர்க்க வேண்டும். காயாக இருக்கும் போது சேர்த்தால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம் சளிக் கோளாறுகள் போன்றவை தோன்றும்! அதனால்தான் கடைகளில் முற்றிய பீர்க்கன் காய்களே விற்பனை செய்யப்படுகின்றன. இதுவும் ஒரு டானிக் காய்கறிதான்! P1015893100 கிராம் பீர்க்கில் புரதம் 0.5% உள்ளது. கால்சியம் 40 மி.கிராமும், பாஸ்பரஸ் 40 மி. கிராமும், இரும்புச் சத்து 1.6 மி.கிராமும், வைட்டமின் ‘ஏ’ 56 அகில உலக அலகும், ரிஃபோபிளவின் 0.01 மி.கிராமும், தயாமின் 0.07 மி. கிராமும், நிகோடின் அமிலம் 0.2 மி.கிராமும், வைட்டமின் 5 மி.கிராமும் உள்ளன. நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள்...

மஞ்சள் காமாலை

Image
மஞ்சள் காமாலை பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது. அறிகுறிகள்: சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும். சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்: கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம். அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம். அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம். கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம். சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்...

சோற்றுக்கற்றாழை

Image
சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உட ையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது. தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்ல கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு. கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும். சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும். வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும். கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து ...